
இன்று புதன்கிழமை காலை காவற்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த போராட்டம் மீண்டும் வலுவடைந்துள்ளது.
சற்று முன்னர் பிரதமர் எத்துவார் பிலிப் பாராளு மன்றத்தில் கலந்துரையாற்றிவிட்டு, ஊடக சந்திப்பில் ஈடுபட்டார்.
ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் பல்வேறு மாற்றங்களை அறிவித்திருந்தார். பல்வேறு தொழிற்சங்கள், பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பிரதமரின் உரைக்காக காத்திருந்தனர். அவர்களோடு காவற்துறையினரும் காத்திருந்தனர்.
ஆனால் பிரதமரின் உரை அவர்களுக்கு திருப்திகரமானதாக இல்லை. எங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை தான் பிரதமர் அறிவித்துள்ளார் என Unit-SGP-Police தொழிற்சங்கத்தலைவர் Yves Lefebvre தெரிவித்தார்.
இதனால் வரும் நாட்களில் காவற்துறையினரின் போராட்டம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.