போயிங் ரக விமான சேவைகள் இரத்து

போயிங் 737 MAX ரக விமானங்களின் சேவைகளை இரத்துச் செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் United Airlines இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் போயிங் 737 MAX ரக விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போயிங் 737 MAX ரக விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய குறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

போயிங் நிறுவனம், மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ள குறைப்பாடு சரி செய்யப்பட வேண்டும் என United Airlines வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor