ஜனாதிபதியின் முடிவால் ஐ.தே.க அதிருப்தியில்!

சபாநாயகருக்கு உரிய முறையில் அறிவிக்கப்படாமலேயே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதாக லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே சபை முதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை கூறியுள்ளார்.

அத்துடன் ஒருமாத காலம் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறித்த தினத்தில் புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவின் பெயரை சபாநாயகர் அறிவிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor