‘கூர்கா’ ஜூலை 12ஆம் தி திரையில்

சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘கூர்கா’ திரைப்படத்தின் வெளியிட்டு திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளதுடன் எதிர்வருகின்ற ஜூலை 12ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரம் இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த படமாக உருவாகிவரும்’ கூர்கா’வில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor