51 ஆமைகளுடன் ஒருவர் கைது!!

மதுரங்குளி-விருதோடைப் பகுதியில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த (இந்தியன் நட்சத்திர) வகையைச் சேர்ந்த 51 ஆமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலாவி விமானப்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதோடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சம்பவ இடத்திற்குச் சென்ற வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த ஆமைகளை மீட்டனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Recommended For You

About the Author: Editor