இந்தியா , யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு உதவி!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்வதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 300 மில்லியன் ரூபாயை உதவித் தொகையாக இந்தியா வழங்கவுள்ளது.

கைத்தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை, நேற்று (புதன்கிழமை) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்தித்தபோதே குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேவேளை, சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளுக்கான மற்றும் பொதிகளை சோதனை செய்வதற்கான இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor