மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கைது!!

மெக்ஸிக்கோவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Genaro Garcia Luna கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் கடத்தல் குழுவிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மன்னனான El Chapo Guzman இன் Sinaloa கடத்தல் குழு மெக்ஸிக்கோவில் இயங்குவதற்காக பல மில்லியன் டொலர்களை அவர் இலஞ்சமாக பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2006ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மெக்ஸிக்கோ பொதுப் பாதுகாப்பு அமைச்சராக அவர் கடமையாற்றியிருந்தார்.


Recommended For You

About the Author: Editor