ரஜனி படத்தில் கீர்த்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 168 ஆவது திரைப்படமான ‘தலைவர் 168’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையும் ரஜினிக்கு மகளாக ஒரு முன்னணி நடிகையும் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்த போதிலும் இன்னும் அதிகாரபூர்வமாக இது குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை.

ஆனால் ‘தலைவர் 168’ படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர் ரஜினிக்கு மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் சூரி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகவிருக்கும் இந்த படம் 2020ஆம் வெளியாகவுள்ளமை குறிப்படத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்