
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘வலிமை’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த ஒக்டோபர் மாதம் வெளிவந்தது.
இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வரும் 13ம் திகதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் கதாநாயகிக்காக பரிசீலனை செய்யப்பட்டது என்று கூறப்பட்டது.
சமீபத்தில் நடிகை நயன்தாரா, போனிகபூரை சந்தித்ததால் இவர்தான் இப்படத்தின் நாயகியாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது
அந்தவகையில் தற்போது இந்த படத்தில் அஜித் ஜோடியாக பிரபல பொலிவுட் நடிகை ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில், நீரவ்ஷா ஒளிப்பதிவு உருவாகவிருக்கும் இந்தப் படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமதகும். இந்த படத்தில் அஜீத் பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.