செக் குடியரசின் மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் உயிரிழப்பு

செக் குடியரசின் ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருப்பு அறையில் 6 பேரை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தன்னைத் தானே சுட்டு இறந்து கிடப்பதை மூன்று மணி நேரத்தின் பின்னர் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

6 பேரைச் சுட்டுக் கொன்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. எனினும் அவரது நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை.

இன்று காலை 7:19 க்கு ஓஸ்ட்ராவாவில் உள்ள மருத்துவமனைக்கு பொலிஸார் அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் அதிர்ச்சிப் பாதிப்பு சிகிச்சைப் பிரிவில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர். மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்த நோயாளிகள் என்று கூறப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்