நியூ ஜேர்சியில் துப்பாக்கிச் சூடு – ஆறு பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூ ஜேர்சியின் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இதன்போது இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த சம்பவத்தை தொடர்ந்து நியூ ஜேர்சி மாநிலத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் விற்பனை நிலைங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுவதால் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்