வீட்டில் மணக்கும் பிரசாதம்: கிச்சடி

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்
பச்சைப் பயறு – அரை கப்
தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகு, சீரகம், பெருங்காயம் – தலா அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 2 (சிறியது)
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

எப்படிச் செய்வது?

பச்சரிசியை அரை மணி நேரமும் பச்சைப் பயறை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவையுங்கள்.

ஊறியவற்றில் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் விட்டு பிரிஞ்சி இலை, மிளகு, சீரகம், பெருங்காயம், துருவிய இஞ்சி, அரிந்த பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

அரிசி, பயறு இரண்டையும் சேர்த்து வதக்கி, இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டுங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து மூடிவையுங்கள். அரிசியும் பருப்பும் நன்றாக வெந்ததும் இறக்கி வைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.


Recommended For You

About the Author: Editor