சிறுவனின் படத்தை உதாசீனப்படுத்தியதாகப் பிரித்தானிய பிரதமர்!

நோய்வாய்ப்பட்ட சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் தரையில் படுத்துக் கிடக்கும் படத்தை உதாசீனப்படுத்தியதாகப் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது குறைகூறப்பட்டுள்ளது.

பிரிட்டனில் நாளை மறுநாள் தேர்தல்.
திரு ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
பிரெக்சிட், பிரிட்டனின் பொதுச் சுகாதாரச் சேவை ஆகிய இரண்டும் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன.
இந்நிலையில், நிமோனியா சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, படுக்கை இல்லாததால் மருத்துவமனையின் தரையில் சிகிச்சை அளிக்கப்பட்ட 4 வயதுச் சிறுவன் ஒருவனின் படத்தை செய்தியாளர் ஒருவர், திரு ஜான்சனிடம் கைத்தொலைபேசியில் காட்டினார்.
அதைத் திரு ஜான்சன் தவிர்த்தார். அந்தப் படத்தைத் தாம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று கூறிய திரு ஜான்சன், தேசிய சுகாதாரச் சேவைக்கான முதலீட்டுத் திட்டங்களை விளக்கத் தொடங்கினார்.
மேலும் செய்தியாளரின் கைத்தொலைபேசியை எடுத்துத் தமது பையில் போட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், சிறுவனின் நிலை மோசமானது என்று ஒப்புக்கொண்ட அவர், சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்த உறுதிகூறினார்.
அவரது செயலை எதிர்த்தரப்புத் தொழிற்கட்சி உடனடியாக சமூக ஊடகங்களில் பகிர்ந்தது.
திரு ஜான்சனுக்கு நோயாளிகள் மீது இரக்கம் இல்லை என்று அது சாடியது.

Recommended For You

About the Author: Editor