ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் கைது செய்யப்பட்ட நிர்வாண பெண்..!!

ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்கு முன்னால் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் பூட்டினுக்கு எதிராக குறித்த பெண் ஆர்ப்பாட்டம் செய்திருந்ததாக அறிய முடிகிறது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும் விளாதிமிர் பூட்டிக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.
உக்ரைன் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து இடம்பெற உள்ள இந்த சந்திப்பதை கண்டித்து குறித்த பெண் ஆர்ப்பாட்டம் செய்தார். Femen அமைப்பைச் சேர்ந்த குறித்த பெண் அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்தார். பின்னர் சில நிமிடங்களுக்குள்ளாக அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த போராட்டத்துக்கு உக்ரைனைச் சேர்ந்த Inna Shevchenko எனும் Femen அமைப்பாளர் ஒருவர் உரிமை கோரியுள்ளார். நேற்று திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor