விநியோகிஸ்தர்கள் ஒரு மில்லியன் பெறுமதியுள்ள பொருட்களுடன் மாயம்..!!

Chronopost நிறுவனத்தைச் சேர்ந்த பொருட்கள் விநியோகம் செய்யும் வாகனம் ஒன்று மாயமாகியுள்ளது.
வாகனத்துக்குள் ஒரு மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Alfortville (Val-de-Marne) நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொதிகள் அனுப்பும் பிரபலமான நிறுவனமான Chronopost நிறுவனத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனத்தின் சாரதியும், குறித்த நிறுவனத்தின் துணை ஊழியர் ஒருவரும் வாகனத்தில் பயணித்த நிலையில் காலை 9 மணிக்கு இருவரும் மாயமாகியுள்ளனர்.
குறித்த இருவரும் தங்கள் கடமையை முடித்துக்கொண்டு 17:00 மணிக்கு அலுவலகத்துக்கு திரும்பியிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் மீண்டும் வரவில்லை. அதன் பின்னர் நிறுவனத்தினர் Valenton நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவனத்தின் சாரதி இம்மாத (டிசம்பர்) ஆரம்பத்தில் பணியில் அமர்தப்பட்டதால் சந்தேகம் வலுக்கின்றது.

Recommended For You

About the Author: Editor