கொன்று குவிக்கப்பட்டனர் 25தலிபான் தீவிரவாதிகள்!

ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் தீவிரவாதிகளை, வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 25 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

வார்டக் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மேற்கொண்ட அதிரடி தாக்குதலிலேயே இவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், அந்நாட்டின் நட் அலி மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த ஒரு தலிபான் தீவிரவாதி வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச்செய்ததில், சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் தீவிரவாதிகள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், இவர்களை அழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு அரசுப்படைகளும் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor