சின்னத்திரையில் கால்பதித்தார் 80களில் புகழ்பெற்ற நடிகை!

பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கூலிக்காரன் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் நடிகை ரூபினி.

தொடர்ந்து ரஜினியுடன்மனிதன், கமலுடன் மைக்கேல் மதன காமராஜன், விஜயகாந்துடன் புலன் விசாரணை என 80களில் பிஸியான நடிகையாக வலம்வந்தார்.

இதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலான ரூபினி தற்போது மீண்டும் திரைத்துறையில் கால்பதித்துள்ளார்.

அதாவது சின்னத்திரையில் நடிகை ராதிகா தயாரித்து நடிக்கும் சித்தி 2 சீரியலில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

இதற்காக சென்னை வந்துள்ள ரூபினி, நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் சினிமாவிலும் நடிக்க தயார் என்கிறார்.


Recommended For You

About the Author: Editor