
கார்த்தி – ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது பாடல்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் இன்று (செவ்வாய்ககிழமை) வெளியாகவுள்ளது.
‘பாபநாசம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும், தற்போது எடுக்கப்பட்டவதாகவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஜோதிகா கார்த்தியின் அக்காவாக நடிக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வஸந்த் இசையமைப்பில் திரில்லர் சஸ்பென்ஸ் கதையாக உருவாகியுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையிலான பாசத்தை மையமாக வைத்து உருவாகிவுள்ளது.
வயாகம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் இம் மாதம் வெளியாகவுள்ளது.