மரண தண்டனையில் மாற்றமில்லை! ஐ.நாவுக்கு மைத்திரி அறிவித்தார்

மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பிலான தீர்மானத்தில் மாற்றமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரண தண்டனையை ஏன் அமுல்படுத்த விளைகிறேனென, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளருக்கு, தொலைபேசி மூலம் விளக்கியதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டினியோ குட்டாரெஸ், நேற்றைய தினம் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, மரண தண்டனை நிறைவேற்ற நினைப்பதன் காரணமென்னவெனக் கேட்டதாகவும் இதன்போது, அதற்கான காரணங்களைத் தான் அவருக்கு விளக்கியதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


Recommended For You

About the Author: Editor