
நைஜீரியாவில் கண்டெய்னர் லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நாடாக திகழும் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சாலைகள் உட்பட அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
மோசமான சாலைகள், அதிக பாரம் ஏற்றுதல் போன்ற காரணங்களால் அங்கு பல்வேறு விபத்துக்கள் அரங்கேறிவருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் நிகர் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் 103 பேருடன் கண்டெய்னர் லொரியொன்று பயணித்தது.
சாமில் என்ற கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லொரி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லொரியில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 91 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், கண்டெய்னர் லொரி வேகமாக சென்றதாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.