முல்லையில் துப்பாக்கி சூடு

முல்லைத்தீவு – மல்லாவியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதான இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்