ஓரினச்சேர்க்கையாளர்கள் 6வர் மீது தாக்குதல்!!

பரிசில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆறு பேர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் Pyrenees இல் இடம்பெற்றுள்ள போதும், நேற்று வியாழக்கிழமையே இத்தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு, 8 மணி அளவில் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஆறு பேர் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

குறித்த ஆறு பேரில் நால்வர் ஜோடிகள் எனவும், மேலும் இருவர் நண்பர்கள் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த நபர் ஒருவர் குறித்த ஜோடியாக இருந்த நால்வரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை வீதியில் சென்ற நபர் ஒருவர் படம் பிடித்ததோடு, உடனடியாக காவல்துறையினரை அழைத்து தகவலும் தெரிவித்துள்ளார்.

15 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதல், அதன் பின்னர் காவல்துறையினர் வந்து முடிவுக்கு கொண்டுவந்தனர்.

தாக்குதல் நடத்திய நபரையும் கைது செய்தனர்.

பரிசுக்குள் 2018 ஆம் ஆண்டில் 231 தாக்குதல்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது பதிவாகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor