வெளியானது முதல் நாடாளுமன்ற கூட்டம் தொடர்பான அறிவிப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் நாடாளுமன்றக் குழு கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் முதல் நாடாளுமன்றக் குழு கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் மாலை 06 மணிக்கு நடைபெறும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்போது இடைக்கால அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் செய்ய வேண்டிய விடயங்கள் குறித்த விவாதங்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டின் வளர்ச்சி தொடர்பான குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டங்கள் இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்படும் என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor