மக்களால் முறியடிக்கப்பட்டது சட்டவிரோத மணல் அகழ்வு!

வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் மக்கள் ஒன்று திரண்டு முறியடித்தனர்.

மணல் அகழ்வு தொடர்பாக அப்பகுதி மக்களால் பிரதேச செயலர் , பொலிஸாரிற்கு பல தடவை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இண்றைய தினம் மக்கள் ஒன்றாக மணல் அகழப்படும் இடம் சென்றபோது பொலிஸாரும் ,பிரதேச செயலரும் அப்பகுதி சென்றுள்ளனர்.

மக்கள் வருவதை அறிந்த மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். மணல் அகழ்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேதச செயலர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor