
மக்கள் வங்கி தனது 300வது டிஜிற்றல் வங்கிக் கிளையை திறந்து வைத்துள்ளது.
இவ்வருட இறுதிக்குள் நாடு முழுவதிலும் 348 வங்கிக் கிளைகள் டிஜிற்றல் மயப்படுத்தப்படுமென்று மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதிலும், மக்கள் வங்கியில், 5 இலட்சத்திற்கு மேற்பட்ட டிஜிற்றல் வங்கி கணக்குகளை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.