முன்னாள் இராஜாங்க – பிரதி அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

உத்தியோகபூர்வ இல்லங்களையும் வாகனங்களையும் ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்ற அமைச்சு தீர்மானித்துள்ளது.

சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் அவர்களின் பதவி காலத்தின் போது பயன்படுத்திய வீடுகள் வாகனங்கள் ஆகியவற்றை ஒப்படைக்குமாறு ஏற்கனவே அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களையோ, வாகனங்களையோ ஒப்படைக்கவில்லை.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர் தங்குமிட பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

உத்தியோபூர்வ இல்லங்களையும், வாகனங்களையும் ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபருடன் அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மட்டுமே உத்தியோகபூர்வ இல்லத்தையும், வாகனங்களையும் ஒப்படைத்திருப்பதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil


Recommended For You

About the Author: Editor