கடும் வெப்பத்தால் முதலாவது உயிரிர் போனது..!!

இந்த வாரத்தில் நீடிக்கும் அதிக வெப்பம் காரணமாக முதலாவது மரணம் சம்பவித்துள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இருந்து அதிகளவு வெப்பம் நீடித்து வருகின்றது.

நேற்றைய தினம் Haut-Rhin இல் அதிக வெப்பம் காரணமாக எட்டு மாணவர்களும், ஒரு ஆசிரியரும் உடல் சோர்வுற்று மயங்கி விழுந்துள்ளனர்.

அதேவேளை, Indre-et-Loire இல் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 18 மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.

Berd’huis (Orne)  இல் உள்ள பாடசாலை ஒன்றில் 26 மாணவர்கள் உடற்சோர்வு ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, Vaucluse மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக இடம்பெற்ற இந்த மரணம், இந்த வெப்ப நாட்களில் பதிவான முதல் உயிரிழப்பு இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெயில் காலத்தில் நீர் சார்ந்த விளையாட்டுக்கள் தவிர ஏனைய விளையாட்டுக்களில் ஈடுபடவேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor