மருந்து கொள்வனவுக்கு ஒரு பில்லியன் ரூபா விடுவிப்பு!!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு தேவையான புற்றுநோய் மருந்துகளை உள்ளூரிலேயே கொள்வனவு செய்துகொள்வதற்கு சுகாதார அமைச்சு திறைசேரியில் இருந்து ஒரு பில்லியன் ரூபா நிதியை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அபேக்ஷா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள புற்றுநோயாளிகளுக்காக தேவைப்படும் 24 அத்தியாவசிய மருந்துவகைகள் தொடர்பாக அந்த வைத்தியசாலை சுகாதார அமைச்சிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனையடுத்தே மேற்படி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவரது நிர்வாகத்தின்போது மேற்படி மருந்து தட்டுப்பாடு தொடர்பாக தகவல்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என்று எச்சரித்திருந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வசந்த திசாநாயக்க அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து புதிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இது தொடர்பாக திறைசேரியின் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மருந்து தட்டுப்பாட்டை சீர்செய்ய திறைசேரியில் இருந்து ஒரு பில்லியன் ரூபா நிதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது


Recommended For You

About the Author: Editor