
சாட்சியம் பெற்றுக்கொள்வதற்காக சிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடுத்து அவர் இன்று (திங்கட்கிழமை) குற்றப்புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து சற்றுமுன்னர் அவர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.