
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படுவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் 400 கிராம் பால்மா பக்கெற்றின் விலை 15 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெற்றின் விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை கடந்த செப்ரெம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் அதிகரித்திருந்தது.
400 கிராம் பால்மா பக்கெற்றின் விலை 20 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெற்றின் விலை 50 ரூபாவாலும் அந்த அதிகரிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.