
நேற்று ஜூன் 27 ஆம் திகதி, வியாழக்கிழமை வரலாற்றில் இல்லாத அளவு வெப்பம் பதிவானதாக Météo France அறிவித்துள்ளது.
Gard மாவட்டத்தின் Saint-Julien-de-Peyrolas நகரில் நேற்று 41.9°c வெப்பம் பதிவானது. ஒரு ஜூன் மாதத்தில் பிரான்சில் பதிவான அதிகூடிய வெப்பம் இதுவாகும். ஒரு ஜூன் மாதத்தில் முன் எப்போதுமே இந்த அளவு வெப்பம் பதிவாகவில்லை.
இதற்கு முன்னர் பதிவான அதிகூடிய வெப்பம், 2003 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. அன்றைய தினம் Lézignan-Corbières (Aude) இல் 41.5°C வெப்பம் பதிவாகியிருந்தது. அந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், துரதிஷ்ட்ட வசமாக இந்த சாதனை இன்று வெள்ளிக்கிழமை முறியடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது