
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ படத்தின் கலக்கலான ரீசர் வெளியாகியுள்ளது.
’96’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்ராரின் ‘பேட்ட’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா, தற்போது ராங்கி படத்தில் அக்ஷன் சூப்பர் ஸ்ராராக மாறியுள்ளார்.
ராங்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநரான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். அக்ஷன் படமாக உருவாகியுள்ள ‘ராங்கி’ படத்தின் ரீசரை தற்போது நடிகை த்ரிஷா தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.