ஈரானுக்கு அமெரிக்கா பாராட்டு!!

கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஈரான் நியாயமாக நடந்துகொண்டதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படும் வாய்ப்பு இருப்பதை கைதிகள் பரிமாற்றம் எடுத்துக்காட்டியிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அமெரிக்க ஆய்வு மாணவர் சியுவெ வாங்கை (Xiyue Wang) ஈரான் விடுவித்தது.

அதற்குப் பதிலாக, ஈரானிய விஞ்ஞானி மசூத் சோலைமணியை (Massoud Soleimani) அமெரிக்கா விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor