ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம்!!

அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் ஒன்று பொது நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு பல்வேறு தரப்பினாலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதனால் குறித்த சுற்றறிக்கையை திருத்தம் செய்ய கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அரச அலுவலகங்களில் சேலைஅல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு முன்னர் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையே எ திர்ப்புக்களுக்கு காரணமாக அமைந்தது.

வெவ்வேறு இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாகவும் சேலை அல்லது ஒசரி மாத்திரம் அணிய கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்ட புதிய சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor