பருவநிலை உயிர்வாயுவின் அளவு குறைவதாக எச்சரிக்கை!

பருவநிலை மாற்றத்தால் கடலில் உயிர்வாயுவின் அளவு குறைந்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள், கரையோரச் சமூகங்கள் ஆகியவற்றுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலகச் சங்கம் எச்சரித்துள்ளது.

குறைந்த உயிர்வாயு அளவு கொண்ட சுமார் 700 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்தது. 1960களில் அந்த எண்ணிக்கை 45ஆக இருந்தது.

அதே நேரத்தில் உயிர்வாயு அறவே இல்லாத இடங்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இயற்கைப் பாதுகாப்பிற்கான சங்கம் குறிப்பிட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor