“விரைவில் திருமணம்” _ யோகிபாபு உறுதி!

தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நகைச்சுவை நடிகர் யோகிபாபு, “’பாட்ஷா’ படத்திற்காக 4 ரூபாய் டிக்கெட்டில் அடித்துக் கொண்டுபோய் படம் பார்த்தவனுக்கு அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி தராதா?

ரஜினி சார் எனக்கு நிறைய சொல்லி கொடுத்தார். அவர் படத்துக்கு காமெடி நடிகரே தேவை இல்லை. அவரே சூப்பரா காமெடி பண்ணுவார்.

யோகிபாபுவிடம் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும், எனக்கு கல்யாணம் நடக்காதது தான் பிரச்சனையா? கூடிய விரைவில் எனக்கு திருமணம் நடந்து விடும்.

உனக்கு தை மாதம் கல்யாணம் நடக்கும் நான் வருகிறேன் என ரஜினி சார் என்னிடம் சொன்னார். இவ்வாறு யோகிபாபு கூறினார்.


Recommended For You

About the Author: Editor