பட்டாயா ஹொட்டலில் தீ விபத்து – காப்பற்றப்பட்ட 400 சுற்றுலா பயணிகள்

தாய்லாந்தின் பிரபல சுற்றுலா நகரான பட்டாயாவில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சமயத்தில் 400 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கு தங்கியிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் எந்தவித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஹொட்டலின் முகப்புப் பகுதியில் தீ ஏற்பட்டதால், விருந்தினர்கள் அறைக்கு தீ பரவ முன்னர் அவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பட்டாயாவின் பாங் லமுங் என்ற இடத்தில் அமைந்துள்ள Soi Buakhao என்ற பிரபல்ய ஹொட்டலிலேயே இந்த தீ விபத்து நேற்று அதிகாலை ஏற்பட்டதாக ஷொன்பூரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் உள்ளுர்வாசிகளின் துணையுடன் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், இதன்போது ஒரு மில்லியன் (Baht) ஹொட்டலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

குறித்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் தற்சமயம் விசாரணைகளை மேறகொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்