
டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கியுள்ள ஏனையோரை மீட்கும் பணிகளில் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியிலுள்ள ஜான்சி ராணி சாலையிலுள்ள தொழிற்சாலையொன்றிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்திருக்கலாமெனவும் 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாகவும் தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்றுள்ள மருத்துவ குழுவினர், படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.