திருமலையில் படகு கவிழ்ந்து, ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை உப்பாறு கடற்பரப்பிற்கு மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு இந்த விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் இருவர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்