இதுதான் இந்திய நியாயம்?

பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றச்சாட்டிற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் ராம் ரகீம் சாமியார்.

அவர் தான் விவசாயம் செய்ய வேண்டும் என்றும் அதற்காக 3 மாதம் பரோல் விடுமுறை தர வேண்டும் என்று கோரினார்.

உடனே அம் மாநில பாஜக அரசு “மூன்று மாத பரோல் எதற்கு? தண்டனையை குறைத்து முழு விடுதலையே தருகிறோம்” என்று கூறி அவ்வாறு விடுதலை செய்ய முயற்சி செய்கிறது.

இதேபோலத்தான் நடிகர் சஞ்சய்தத் சிறைவைக்கப்பட்டபோது தனது பெண் நண்பர் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாகவும் அவருடன் சந்தோசமாக பொழுது கழிக்க ஒருமாதம் பரோல் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

சஞ்சய்தத் சிறையில் இருந்த நாட்களைவிட பரோல் விடுமுறையில் இருந்த நாட்களே அதிகம். அப்படியிருந்தும் தண்டனைக் குறைப்பு வழங்கி முழு விடுதலை அவருக்கு பம்பாய் மாநில அரசு வழங்கியது.

ஆனால் ஏழு தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியும் அதன்படி மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியும்கூட தமிழக ஆளுநர் விடுதலை செய்ய மறுத்து வருகிறார்.

அதுமட்டுமல்ல தனது மகளின் திருமண விடயமாக நளினி பரோல் விடுமுறை கேட்டும் அதற்குகூட தமிழக அரசு மறுத்து விட்டது.

சமூக ஆர்வலர் நந்தினி அவர்களுக்கு ஜீலை 5ம் திகதி திருமணம் நடைபெற இருக்கிறது. ஆனால் அவர் நீதிமன்றத்தை அவமதித்தார் எனறு;கூறி ஜீலை 9ம் திகதிவரை சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக செயலர் எச்ச.ராசா “உயர்நீதிமன்றவாவது மயிராவது” என்று பேசினார். அவரை சிறையில் அடைக்க முடியாத நீதிமன்றம் நந்தினியை அதுவும் திருமணம் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் அதுகுறித்து கொஞ்சம்கூட இரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கிறது.

இந்திய அரசிடமோ அல்லது இந்திய நீதிமன்றங்களிலோ தமிழருக்கு நியாயம் கிடைக்காது.

இதுதான் இந்திய நியாயம் என்பதை இனியாவது தமிழர் புரிந்து கொள்ள வேண்டும்


Recommended For You

About the Author: Editor