என்கவுன்டர் நடந்த இடத்தில் மனித உரிமை ஆணைக்குழு ஆய்வு.

ஹைதராபாத் நகரில் பொலிஸாரின் என்கவுன்டரில் 4 கொலைக் குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தையும் கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ‘உண்மை கண்டறியும் குழு’ அதிகாரிகள் ஹைதரபாத்தை சென்றடைந்தனர். மெகபூப்நகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளின் உடல்களை ஆய்வு செய்தனர்.

இதன்ப பின்னர் என்கவுன்டர் நடத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் இதுவரை கிடைத்த தடயங்களை சேகரித்துள்ளனர்.

ஹைதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயது கால்நடை பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சைபராபாத் பகுதி பொலிஸார், குற்றவாளிகள் 4 பேரையும் பெண் வைத்தியரை எரித்துக் கொன்ற ஹைதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் அங்கு அவர்கள் தப்பியோட முயன்ற நிலையில் பொலிஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஹைதராபாத் பொலிஸார் நடத்திய என்கவுன்டர் தொடர்பாக தாமே முன்வந்து விசாரணை செய்வதற்கு தயாராகியுள்ள தேசிய மனித உரிமை ஆணையம் சம்பவ இடத்துக்கு ‘உண்மை கண்டறியும் குழுவை’ அனுப்பி வைக்கவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்