
ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் திஷாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகள் கொல்லப்பட்டது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
குறித்த கொலை அரங்கேறிய தருணத்தில் குற்றவாளிகள் காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றபோது, அவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் தேசம் அதைக் கொண்டாடுகிறது.
அந்த வகையில் , பல பிரபலங்கள் தெலுங்கானா போலீஸ் அணியின் செயலை பாராட்டி கொண்டாடிய நிலையில் இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

