
உரிமைகளை வென்றெடுக்க அகிம்சை ரீதியாக உயிர் தியாகம் செய்ததும் ஆயுதம் ஏந்தியதும் இலங்கை தமிழர்களே
மூன்று தசாப்தங்களாக யுத்தம் புரிந்து யுத்தத்தில் தோல்வியையும் தழுவி இன்றும் தமிழர்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளையேனும் பெற்றுக்கொள்ள முடியாத சாபத்தினை கொண்டுள்ளது தமழ் இனம்.
இன்னும் எத்தனை வருடங்கள் நாம் எமக்கான உரிமைகளை வென்றெடுக்க ஒரு சமூகத்துடன் போராடப் போகின்றோம் வடக்கின் ஆளுனர்களாக பலர் நியமிக்கப்பட்ட போதிலும் இறுதியில் கௌரவ சுரேன் ராகவன் கடமையாற்றிய போதிலும் முழுமையாக நாம் இதுவரை எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
தமிழீழ தேசிய தலைவர் என அழைக்கபடும் வேலுப்பிள்ளை பிரபாகரன் ராஜதந்திரமற்ற அரசியல் நகர்வும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ரா.சம்மந்தனின் விட்டுக்கொடுப்பற்ற அரசியல் முன் நகர்வுக்ளுமே இதற்கு காரணமாகும்
மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண அரசிற்கு வழங்கப்படும் சலுகைகளை மீளனுப்புதல் இன்றி செயல்பட வேண்டுமாயின் வட மாகாணத்தை நன்கு அறிந்த ஒருவர் ஆளுனராக நியிமிக்கபடுதல் இன்றியமையாதது.
அந்த வகையில் வட மாகாணத்திற்கு ஆளுனராக நியமிப்பதற்கு இருவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வரலாற்றுப் பின்னனி என்ன என்பது தொடர்பில் நாம் அறிந்திருப்பதம் அவசியமாகும்.
சிரேஷ்ட ஊடகவியளாலர் கே.ரீ. ராஜசிங்கம் மற்றும் ஊடகவியளாலர் என் .வித்தியாதரன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
இவர்களில் வித்தியாதரன் என்பவர் கடந்த காலங்களில் செயல்பட்ட விதமானது வடக்கு மக்கள் வாழ வேண்டும் என்பதனை விட அவர்களை ஆள வேண்டும் என சிந்தித்திருக்கிறார் என்று தான் தோனுகிறது.
சமாதான பேச்சு வார்த்தையின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஊடகவியள்ளலர் சந்திப்பிற்கு திட்டமிட்டு அழைத்து வந்து காட்டிக் கொடுத்த பெருமையும் இவரையே சாரும்.
அது மாத்திரமின்றி யுத்தம் நிறைவடைந்தத பின்னர் சில முன்னால் போராளிகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு ஜனநாயக போராளி கட்ச்சிகள் என ஒன்றை நிறுவி அதன் வாயிலாக அரசியல் லாபம் தேட முயற்ச்சித்தவரும் இவராவார்.
தற்சமயம் வடக்கு மாகாணத்தின் ஆளுனர் பதவிக்கும் ஆசைபட்டு சில பேரின வாதிகளின் அடியோற்றி நடக்கவும் ஆரம்பித்துள்ளார்.
மறுமுனையில் மூத்த பத்திரிகையாளர் ஆன கே.ரீ. ராஜசிங்கம் என்பவரிகன் பெயரும் ஆளுனர் பதவிக்காக பரிந்துறைக்கப்பட்டுள்ளது என அறிய முடிகின்றது
தமிழ் மக்களுக்கு சுதந்திரம் பெற்று தருவதாக தெரிவித்து தமிழர்களின் சிந்தனைகளையும் புத்தாக்கங்களையும் முடக்கி ஆண்ட ஆயுத அமைப்பு ஒன்றை எதிர்த்து குரல் கொடுத்ததால் கே.டிஇ ராஙசிங்கம் என்பவர் சுமார் 10 தடவைகள் அவ் அமைப்பினால் குறிவைக்கப்பட்டார்.
ஆனாலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு எந்தவித அச்சமும் கொள்ளாமல் அரச துறையில் தமிழர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் பல்வேறு உதவிகளையும் செய்து வந்து தற்போது தமிழ் மக்களிடத்தில் நீங்கா சிறப்பினை பெற்று விளங்குகின்றார்.
இவரின் சுமார் 60 வருட பொதுப்பணி பயணமானது இன்றும் ஓயவில்லை என்றே மக்களிடத்தில் நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தெரிந்து கொண்டோம். வடக்கு மாகாண மக்கள் மூத்த பத்திரிகையாளரான கே.டி.ராஜசிங்கத்தினை ஆளுனராக நியமிக்குமாறு தாம் கோருவதாகவும் அவரின் சேவையே தற்போது அமைந்துள்ள அரசாங்கத்தின் ராஜதந்திர நகர்வுகளை முறியடிக்கும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அடுத்த ஆளுனராக நியமிக்கபடபோவது நிபந்தனைகளுடன் மக்களை தண்டனைக்கு உட்படுத்தும் ஒருவரா அல்லது ராஜதந்திர அனுகுமுறையின் மூலம் மக்களை வளம் பெற செய்யும் கே.டி ராஜசிங்கம் போன்றவரா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.