கனரக வாகனங்கள் மூலம் வீதி முடக்கம்!

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து, கனரக வாகன உரிமையாளர்கள் வீதி முடக்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

Aix-en-Provence இல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கனரகவாகன உரிமையாளர்கள், பிரான்ஸ்-இத்தாலி நெடுஞ்சாலையான A8 நெடுஞ்சாலையை , தங்கள் வாகனம் மூலம் முடக்கினர். வீதியில் வாகனத்தை நிறுத்தியதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.

தவிர, சற்று முன்னர் இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு போக்கிவரத்து சீரடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 800 இல் இருந்து 1000 கனரக வாகனங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.


Recommended For You

About the Author: Editor