கொழும்புத் துறைமுக நகரம் முதலீட்டாளர்களுக்காக திறப்பு!

கொழும்புத் துறைமுக நகரத்தின் 269 ஹெக்டேயர் நிலபரப்பை, கொழும்பு நகரத்தின் வர்த்தக நிலப்பரப்புடன் இணைத்து சிறப்பு நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஷென் ஸுவான் ஆகியோர் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, கொழும்புத் துறைமுக நகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்பட்டதுடன், அந்த திட்டத்தின் பிரதிபலனை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் முறைமையும் இன்று முதல் ஆரம்பமாவதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பிரசாரங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பிரியாத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor