யுவன்- அஜித் மேஜிக்!

அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம்பெறும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து ஹிட்டான திரைப்படம் ‘பிங்க்’. இது தமிழில் நேர்கொண்ட பார்வை என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன் நடித்து புகழ்பெற்ற வழக்குரைஞர் கதாபாத்திரத்தில் தமிழில் அஜித் குமார் நடித்துள்ளார்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இந்தியில் தப்ஸி பன்னு நடித்து கவனம் பெற்ற வலிமையான கதாபாத்திரத்தில் தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

வித்யா பாலன் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தநிலையில், படத்தில் இடம்பெறும் ‘வானில் இருள்’ எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

பாடகி தீயின் குரலில், வானில் இருள் சூழும்போது மின்னும் மின்னல் துணையே நானும் நீயும் சேரும்போது விடையாகிடுமே வாழ்வே என அமைந்த பாடலசிரியர் உமா தேவியின் வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டு இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், ‘நோ்கொண்ட பாா்வை’ திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor