இரணைமடு குளத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் இன்று(சனிக்கிழமை) காலை வாசிப்பின் பிரகாரம் 35.6 அங்குலமாக காணப்படுகின்றது.

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வான் பாயும் பகுதியில் மக்கள் நெருக்கமாக சென்று பார்வையிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிற்கான உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவற்றை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்