உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானதம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் திறக்கப்படவுள்ளது.

இந்நியாவின் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த மைதானம் ஒரு இலட்சம் இருக்கை வசதிகளைக் கொண்டதும், அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தை விட மிகப் பெரியதும் ஆகும்.

இந்த மைதானத்தில் மொத்தம் 11 ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறன. அத்துடன், மழை பெய்தால் 30 நிமிடத்திற்குள் தண்ணீர் வெளியேறும் வகையில் நவீன வடிகால் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மைதானம் தயாராகி விடும் என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்தார் பட்டேல் பெயரிலான இந்த புதிய மைதானத்தில் மார்ச் மாதம் ஆசிய லெவன்-உலக லெவன் அணிகளுக்கு இடையே கண்காட்சி கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்