சீரற்ற வானிலை – 70,957 குடும்பங்களைச் சேர்ந்த 2,35,906 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 21 மாவட்டங்களில் 70 ஆயிரத்து 957 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 35 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளனர்.

இதேவேளை 20 வீடுகள் பகுதியளவிலும், 943 வீடுகள் முழுமையாகவும் சோதமடைந்துள்ளன.

2 ஆயிரத்து 609 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, அனுராதபுரதம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல், அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களே இவ்வாறு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்