
“செல்வநாயகம் கூறியிருந்தார் தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று. நானும் இறுதி காலப்பகுதியில் சொல்கிறேன் தமிழ் மக்கள் இதேபோல் தொடர்ந்து செயற்படுவார்களாக இருந்தால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது. என தெரிவித்தார் டக்ளஸ் தேவானந்தா.
வவுனியா பகுதியில் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
“நான் தேசிய அமைச்சு எனும் சமுத்திரத்தில் தள்ளி விடப்பட்டுள்ளேன்.இரண்டு கைகளிலும் கருங்கல்லோடு தள்ளிவிடப் பட்டுள்ளேன்.ஒரு கையில் அமைச்சு.மறு கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகள். இவற்றோடு தான் நான் நீந்த வேண்டியுள்ளது” என தெரிவித்தார்